கதையை திருடிவிட்டார் சுந்தர் சி!: இயக்குநர் குற்றச்சாட்டு

Must read

சன் டிவியில் பெரும் ஆரவாரத்துடன் ஒளிபரப்பாகிவரும் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நந்தினி மெகா தொடர், சினிமாவுக்கு இணையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தக் கதை தனக்குச் சொந்தமானது என்று கொடி பிடித்துள்ளார் இயக்குநர் வேல்முருகன்.

நந்தினி தொடரின் கதையை சுந்தர்.சி தன்னிடம் கேட்டு வாங்கியதாகவும், அதற்கான சன்மானம் எதுவும் தராமல், தொடரை ஒளிபரப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டி உள்ளார் வேல்முருகன்.

இதுகுறித்து வேல்முருகன் கூறியதாவது,

“ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார்.

சன் டிவியில் வெளி வரும், நந்தின தொடரின் கதை என்னு டைய கதை. இந்த கதையை என்கிட்டு இருந்து சுந்தர்.சி. வாங்கினார். அப்போது, அவர்  ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினை.. அதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்’னு சொன்னார்.

ஆனால், இதுவரை அவர் எனக்கு எதுவுமே செய்யவில்லை. ஆரம்பத்துல செய்யற மாதிரி சொல்லிவிட்டு கடைசில என் கழுத்தை அறுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  அண்ணாமலை டயலாக் மாதிரிதான். நண்பன் வேல்முருகனை எதிரியா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல… இனி என்னை எதிரியா சந்திப்பீங்க.. கடவுள் உங்களுக்கு எல்லா தண்டனையும் கொடுப்பான். நந்தினி என் கதைன்னு உங்க வாயால சொல்ல வைப்பான்.

இது வேல்முருகனோட சத்தியம், எங்கம்மா, குழந்தைங்க மேல சத்தியம்..,” என்றார் உணர்ச்சிமயமாக.

More articles

Latest article