சென்னை: பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் தவிர்த்து மற்ற  9 தொகுதிகளில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டு உள்ளது. இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் களமிறங்குகறிர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியில்,  பாமக, தாமக, டிடிவி, ஓபிஎஸ் எனப் பலரும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

இந்த கூட்டணியில்  பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறத.  திருச்சி, தேனி லோக்சபா தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. ஜிகே வாசனின் தாமக ஈரோடு, தூத்துக்குடி, ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை முறையே வேலூர் மற்றும் பெரம்பலூரில் போட்டியிடுகிறது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசியிலும் போட்டியிடுகிறது.

இந்த  நிலையில், பாமக போட்டியிடும்  முதல்கட்ட வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா, பி.காம்
மாநிலப் பொருளாளர், பா.ம.க.

அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்
செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

கடலூர் – திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக்,
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

மயிலாடுதுறை – திரு. ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி – திரு. இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.,
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

தருமபுரி – திரு. அரசாங்கம், பி.காம்.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தருமபுரி கிழக்கு மாவட்டம்

சேலம் – திரு. ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

விழுப்புரம் – திரு. முரளி சங்கர், பி.காம்.,
மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி