தமிழ் திரைப்பட இயக்குனர் ராஜ்மோகன் மாரடைப்பால் மரணம்…..!

Must read


தமிழில் அழைப்பிதழ், கேடயம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ராஜ்மோகன் சென்னையில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டினுள் முடங்கி போயுள்ளனர். இயக்குனர் ராஜ்மோகன் தனியாக இருப்பதால் தெரிந்த ஒருவரது வீட்டில் தான் தினமும் சாப்பிட வந்து போவார்.அவருக்கு திருமணமாகவில்லை என்பதால் தனிமையில் இருந்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு வயது 47 .
ஆனால் திடீரென அவர் வராமல் போனதால் அவர் சென்று பார்த்தபோது இயக்குனர் ராஜ்மோகன் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது.
அவரது உடலுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இதையடுத்து இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. ஊருக்கு உடலை கொண்டு வர வேண்டாம் என்று உறவினர்கள் தெரிவித்துவிட்டார்களாம். இதனால் நெசப்பாக்கத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

More articles

Latest article