2018ஆம் ஆண்டு ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு ‘அக்வாமேன்: தி லாஸ்ட் கிங்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதை இப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் வான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதற்கான போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் ‘அலை எழுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.