அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு சுரேஷ் தயாரிக்க உள்ளாராம். மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ‘ஜி.ஏ.2 பிக்சர்ஸ்’. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உருவாக்கிய இந்த நிறுவனத்தில் இன்னொரு பங்குதாரராக இருப்பவர் பன்னி வாசு.

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அளித்துள்ள பேட்டியில், அல்லு அர்ஜுனின் அடுத்த படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் ‘புஷ்பா’ படத்தைத் தொடர்ந்து, வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாகும் ‘ஐகான்’ படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா 2’, ஏ.ஆர்.முருகதாஸ் படம், போயபதி சீனு, கொரட்டலா சிவா ஆகியோரது படங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பன்னி வாசு.