விவசாயிகளுக்காக போராடிய இயக்குநர் வ.கவுதமன், மாணவர்கள் கைது

Must read

சென்னை:
டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக்களம் கண்டுள்ளனர்.

தமிழகத்துக்கு பாரபட்சமற்ற வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை விரைவில் அமைப்பது, விவசாயிகளின் தற்கொலையை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்களுடன் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் அங்கு வந்தார். அவருடன், மாணவர்கள், இளைஞர்கள் மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து போலீசார் அங்குவந்து போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கவுதமன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

 

More articles

Latest article