இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Must read

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகாவுடன்,  ஜி.வி. பிரகாஷ் இணையும்  ‘நாச்சியார்’  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பஸ்ட்லுக் போஸ்டரை ஜோதிகாவின் கணவரான நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார்.

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்க இருக்கும் புதிய படம் நாச்சியார். இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கிறார். மேலும்  முக்கிய கதாபாத்திரத்தில்  ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் எடுக்கப்பட்ட பஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

2015ம் ஆண்டு வெளிவந்த 36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article