“செக்ஸூக்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே”? கருத்தை ஆமோதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Must read

ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு இனி தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த உத்தரவை பற்றி எழுத்தாளர் சேதன் பகத் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்தை வெளிபடுத்தியுள்ளார் அதில் அவர் கூறியதாவது :-
“தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே, நாடகம் தொடங்குவதற்கு முன்பு பாடலாமே, செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே, கேலிக்குரியது இது” என்று அவர் கூறியுள்ளார்.


இந்த டுவிட்டை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் இதை வரவேற்க்கும் வகையில் அதை ரீடுவிட் செய்தார் ஆனால் என்ன ஆச்சோ தெரியல சிரிது நேரத்தில் அதை நீக்கிவிட்டார்.
இருக்காதா பின்ன அடுத்த படம் எடுக்கனுமுல்ல….

More articles

Latest article