வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு..!

Must read

டெல்லி: 6 மாதத்தில் வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாடு முழுவதும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அக்டோபர் 6ம் தேதி வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,21,607 கோடியை 35.93 லட்சம் பேரின் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி அளித்துள்ளது.
அதில், 34,09,246 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 33,238 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 1,83,773 நிறுவன கணக்குகளுக்கு ரூ. 88,370 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article