சென்னை: ஜூன் 28ந் தேதி ‘முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் விடுத்துள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் வரும் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் குறைந்தபட்ச வழக்குகளோடு  நேரடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களான  கோவை, திருப்பூர், ஈரோடு  மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழியர்கள் 75 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் வழக்கு விசாரணை முறைதொடரும் என்றும் , வரும் திங்கட்கிழமை முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம் என்றும்  உயர்நீதிமன்ற சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.