டில்லி:
 
ந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை திரும்பப் பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள்  வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது.  இதையடுத்து அந்நாட்டை சர்வதேச அரசியலில் தனிமைப்படுத்த, இந்திய அரசு ஈடுபட்டு வகிறது. அதே நேரம், இந்தியாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.
1
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரை இந்தியா வெளியேற்றியது. இதற்கு பதிலடி தரும் விதத்தில்,  பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவரை அந்நாடு வெளியேற்றியது.  மேலும், டில்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளில் 6 பேரை பாகிஸ்தான்  திரும்பப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான ராஜிய ரீதியான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் தீர்மானித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதியிலும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.  மேலும்  அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பா சூழல் நிலவுகிறது.  ஆகவே, தூதரக அதிகாரிகளை பாதுகாக்கும் விதமாக, இரு நாடுகளும் இம்முடிவை எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்தினால், இருநாடுகளிலும் தூதரகப் பணிகள் கடுமையாக பாதிக்கும்.