பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அனைத்துப் பாடத்திலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

முதல் முறையாக 600/600 மார்க் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள மாணவி நந்தினியை முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “”படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்” எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன்.

எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.