சென்னை: செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயராக இருக்கிறார்கள் என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.பட்டியலின மக்களை இழிவு படுத்தி பேசியதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி,   செருப்பை தலையில் சுமந்து சென்ற சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாராஜனை மனதில் வைத்து அவர் பேசியதாக  சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில், திண்டுக்கல் லியோனி பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக , பாரதீய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  கடந்த  “19-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  தி.மு.க.சார்பில் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.இதில் தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பட்டியலின  சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலின மக்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை தொடர்ந்து லியோனியும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாகவும், அவர்மீது உடனடியாக  திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்! திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு