பெரியாரை இழுத்த தினகரன்: நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று

Must read

 

பெரியார் பொன்மொழி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தினகரனை, நெட்டிசன்கள் கடுமையாகவும் கிண்டலாகவும் விமர்சித்தபடி இருக்கின்றனர்.

 

 

இன்று காலை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வதாக இன்று காலை சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார். அதோடு, தனது ட்விட்டர் பக்கத்தில், “ பதவி ஆசையில் மிதக்கிறவர்கள்  எப்படிப்பட்ட அற்ப இழிவான
அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெற பார்பார்கள்.அவர்களிடம் சுயநலம் தவிர மணித பற்றோ நாட்டு பற்றோ சிறிதளவும் காண முடியாது” என்ற தந்தை பெரியாரின் பொன்மொழியை பதிவிட்டார்.

 

 

 

தனக்கு ஆதரவான மனநிலையை நெட்டிசன்களிடம் இந்த பொன்மொழி ஏற்படும் என்று தினகரன் எதிர்பார்த்திருப்பார். ஆனால் இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள், தினகரனை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். அவற்றில் சில..

 

 

கரிசற் காட்டான்‏

ஆனால் கடைசி வரைக்கும் ஆட்சியை கலைக்காம, பாஜகவோட தலையீடு நடக்குன்னு தெரிஞ்சும் இதை வளர விட்டதில் உங்களுக்கும் பெரும்பங்குண்டு.

 

 

 

niranjan kumar

கூவத்தூர் முதல் கூர்க் வரையிலான காட்சியினால் உங்களுக்கும் உங்கள் தரப்பு எம்.எல்.ஏ க்களும் இது பொருந்தும் தானே!!!

 

 

 

சந்திராபுத்திரன்

தேர்ந்தெடுக்கப்பட்டவன் துரோகி என்றால் தேர்தெடுத்தவர் முட்டாள் : பெரியார் ….. இது மக்களுக்கானது மட்டும் அல்ல

 

 

 

எல். எஸ். ஹரி‏

நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வருபவன் எதிரே வருபவனை பார்த்து உன் முகத்தில் கரி இருக்கிறது என சொல்வதுபோல உள்ளது.

 

 

 

aswin sidharth‏  : இது தினகரனின் ஒப்புதல் வாக்குமூலம்

 

 

 

 

 

 

 

 

More articles

Latest article