ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதை தொடர்ந்து, இயக்குனர் சிவாவின் படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.

அந்த படத்தின் இறுதிகட்ட எழுத்து பணிகளில் சிவா தீவிரம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கப் போகும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கு ரஜினி தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.