சென்னை: புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளகள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர்.

புஷ்பா-2 படத் தயாரிப்பாளர்  புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.  அதுபோல மற்றொரு  திரைப்பட தயாரிப்பாளர் வாரிசு படத்தயாரிப்பாளரா  தில் ராஜு வீடு மற்றும் அவர் தொடர்புடைய  இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜ. சமீபத்தில் இவரது படமான கேம் சேஞ்சர்,  ஒஸ்தானு படம்  ரிலிசாகியது. இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு  தொடர்பாக   ஐதராபாத்தில் உள்ள தில்  ராஜுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட  பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தயாரிப்பாளர் தில் ராஜூவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இவருக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 அதுபோல புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.   புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனி நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.