சந்தானம் நடிப்பில் 2021 செப்டம்பர் மாதம் வெளியான படம் டிக்கிலோனா.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படத்தின் காட்சிக்கு ஏற்ப மைக்கேல் மதன காமராஜன் படத்தில்  ‘வச்சாலும் வைக்காம போனாலும்’ என்று குஷ்பு கமல்ஹாசன் இடம்பெற்ற டூயட்  பாடலை ரீ-மிக்ஸ் எதுவும் இல்லாமல் அப்படியே இந்தப் படத்தில் சேர்த்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.

1990 ம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசையமைக்க வாலி எழுதிய இந்த பாடலை மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி பாடி இருந்தனர்.

30 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்றும் இளமையோடு இருக்கும் இந்த பாடலை யூ-டியூபில் 10 கோடிக்கும் அதிகமான முறை பார்த்துள்ளனர்.