கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான படம் – டிக்கிலோனா.

1990-ல் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற, பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல், டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா ரீ கீரியேட் செய்துள்ளார்.

இப்பாடலின் விடியோ சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியானது. இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வைகள் இந்த விடியோவுக்குக் கிடைத்துள்ளன.