தாய் – தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு

Must read

சென்னை

தனது தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

சென்ற ஆண்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப் பட்டு அதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராகத் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராகத் தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. விஜய் தரப்பில், கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகி களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளர் ஷோபா, உள்ளிட்டோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அன்று எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

More articles

Latest article