ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு

Must read

சென்னை

மிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தலில் மதிமுக அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு ஆய்வு வரும் 23ம் தேதி நடக்கிறது.   வரும் செப்டம்பர் 25ம் தேதி வேட்புமனுவைத் திருப்பப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி டிடிவி.தினகரன் அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article