டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Must read

 

டில்லி,

த்தியஅரசு கொண்டு வந்துள்ள ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத தாகின. மேலும் புதிய பணங்களும் தேவையான அளவுக்கு புழக்கத்ததில் இல்லாததால், தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதில் கடுமையான சூழல் உருவாகியது. பொதுமக்களும் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அதன் காரணமாக பெருநிறுவனங்கள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண மத்தியஅரசை வலியுறுத்தின.

அதையடுத்து தொழிலாளர்களின் ஊதியங்களை வங்கி கணக்கில் செலுத்தி, டிஜிட்டல் பண வர்த்தனை முறைக்கு மாற்ற மத்தியஅரசு நிறுவனங்களை அறிவுறுத்தியது.

இதுகுறித்து டிசம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரில், இதற்கான திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா கடந்த 7-ந்தேதி பாராளுமன்றத்திலும், 8-ந்தேதி மேல்-சபையிலும் நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்காக அந்த சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான ஊதியத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தவும், காசோலை, எலக்ட்ரானிக் முறை போன்றவற்றை பயன்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்த முடியும்.

ஏற்கனவே இருந்த இந்திய ஊதிய சட்டத்தில்,

இந்திய ஊதிய செலுத்துச்சட்டம் 1936-ன் படி தொழிலாளர்களுக்கான அனைத்து விதமான ஊதியத்தை நாணயம், ரூபாய் நோட்டுகள் அல்லது இரண்டு முறையிலுமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த சட்ட திருத்தம் மூலம் காசேலையோகவோ, டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாகவோ நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விதமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

 

More articles

Latest article