ரூபா டிரான்ஸ்பர்: நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணா!!

டில்லி,

பெங்களூர் சிறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிறைத்துரை டிஐஜி ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாரதியஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் பதாதைகளை கையெலேந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு, சிறைத்துறை ஐ.ஜி  சத்யநாராயணா  சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தாக குற்றம்சாட்டிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த பாரதியஜனததா எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் , ரூபாவை மீண்டும் சிறைத்துறைக்கு மாற்றக்கோரி பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்க  சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியானது.  ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

ஆனால், தமிழகத்தில் இருந்து பெங்களுர் சென்று சிறையில் சசிகலாவை சந்தித்து வரும் அவரது ஆதரவாளர்களோ, சிறையில் சசிகலா நலமாக வசதியாக இருப்பதாக கூறி வந்தனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வுசெய்த டிஐஜி  ரூபா சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டி கடிதம் எழுதினார்.

இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர்மட்டக்குழு விசாரணை நடைபெறும் என்றும் கர்நாடக அரசு அறிவித்தது.

மேலும், பெங்களூர் சரக காவல்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். அத்துடன் சத்யநாராயணாவுக்கு காத்திருப்போர் பட்டியலும், ரூபாவை போக்குவரத்துறைக்கும் மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ரூபாயை மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட சிறையிலேயே கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

கர்நாடக பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இப்பிரச்சனையை கையிலெடுத்து போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் தொடங்கியதும், கர்நாடக மாநில பாஜக எம்.பி.க்கள் திடீரென ரூபா மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


English Summary
DIG Rupa Transfer: Karnataka BJP MP's Dharna in Parliament campus !!