ஐஸ்வர்யா ராய் குறித்த மீம் பதிவு செய்தமைக்கு வருத்தம் தெரிவித்த விவேக் ஓபராய்….!

Must read

நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த மீம் சர்ச்சை ஆனது. அந்த மீமில் நடிகை ஐஸ்வர்யா ராயின் சொந்த வாழ்க்கை பற்றி உள்ளது.

விவேக் ஓபராயின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம் மை நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தி இருந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article