புதுடெல்லி:
கே
ரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா?  என்று  நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கேரளாவுக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில்  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 30,000க்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது, 3-ஆவது அலைக்கான அறிகுறியா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் 1.54 லட்சம் பேர் தொற்றால் பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நேற்றும் தொடர்ந்து 2-ஆவது நாளாக, இம்மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிகை 22,000-த்தை தாண்டியது. இதனால், நோய் பரவலின் அடிப்படையில் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நோய் பரவல் குறைவாக உள்ள ‘ஏ’ பகுதியில் மட்டுமே அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற 3 பகுதிகளிலும் நிபந்தனைகளுடன் மட்டுமே கடைகளை திறக்க முடியும். ‘டி’ பிரிவில் உள்ள பகுதியில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடந்த சில மாதங்களாகவே சனி, ஞாயிற்று ஆகிய 2 நாளும் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் அதிகரிக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை வழங்கவும் தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழுவினர் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு சென்று இக்குழு ஆய்வு நடத்தி   ஒன்றிய அரசுக்கு பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.