ஐதராபாத்: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால்,  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இன்று முதல் தியேட்டர்கள் திறக் மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் கூடும் கோவில்கள், திரையரங்குகள், மால்கள் மூடுவது. போக்குவரத்து தடை  உள்பட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது,  தொற்று  பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஆந்திராவில், 30ந்தேதி முதல்  50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே ஜூலை 8-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டதால், தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.  இந்தநிலையில், தற்போது மாநில அரசு வழங்கிய தளர்வுகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் ( 30ம் தேதி)  மாநிலம் முழுவதும் ‘சி’ சென்டர்களில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படம்.  மேலும், 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றும் அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆந்திராவில் இன்று ‘திம்மருசு’ மற்றும் ‘இஷ்க் – ஒரு காதல் கதை’ ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் இன்று வெளியாகிறது.

அதேவேளையில்  தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், விரைவில் புதிய தெலுங்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.