டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் நிலையில் இது குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைத்து வருவதால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பல மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விரைவில் அதற்கான நடவடிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தான் பெட்ரோலிய பொருட்களுக்கு  அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளன. எனவே அதனை குறைக்கும்படி தாங்கள் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா காந்தி அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.