நெட்டிசன்:

மூத்த ஊடகவியலாளர் அரவிந்த் அக்சன் Aravind Akshan அவர்களது முகநூல் பதிவு:

2000 வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி
தர்மபுரி,இலக்கியப்பட்டியில் வேளாண் கல்லூரி பேருந்து எரிப்பு சம்பவத்தில்,கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி ஆகிய மூன்ற மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவத்தை வீடியோவில் படம் பிடித்தவர் ஒரே ஒரு நபர் தான்.
பெயர் மணி.
அப்போது தர்மபுரி மாவட்டத்தின் சன் செய்தியாளர்.வழக்கில் அவரும் முக்கிய சாட்சியாக இருந்தார்.

சேலம் மாவட்ட விரைவு நீதிமன்றமே அந்த வழக்கை விசாரித்து வந்தது. 2007 ம் வருடம் பிப்ரவரி 16 ம்தேதி முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட முனியப்பன்,
நெடுஞ்செழியன்,ரவீந்திரன் ஆகிய மூன்று பேருக்கு நீதிபதிகள் மரணதண்டனை விதித்தனர்.

2007 டிசம்பர் 6 ம் தேதி
சென்னை உயர்நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தியது.
2010 ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் நாளன்று
உச்சநீதிமன்றமும் அதே மரணதண்டனையை உறுதி செய்தது.

இடையில் குடியரசு தலைவரிடம் கருணை மனு செய்யப்பட்டு,மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
(கருணை மனு இன்றும் நிலுவையில் உள்ளது)

வழக்கு விசாரணையின் போது மரணதண்டனைக்கு தடை விதித்த நீதிபதிகள்
2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள முனியப்பன்,நெடுஞ்செழியன்,ரவீந்திரன் ஆகிய மூவரையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு விடுதலை செய்யவுள்ளது