ருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாரமங்கலம் சேலம் மாவட்டம்.

அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து லிங்க பாண உருவில் அருள் பாலித்தார். அப்போது சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்தார். உடன் ஐந்து முகங்களுடன் பிரம்மா.

சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.

தைப்பூசம் தெப்பத்தேர் – 15 நாள் – 20 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். கார்த்திகை, திருவாதிரை,அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதும். இவை தவிர வருடத்தின் முக்கிய விசேச தினங்களான தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி,தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தினங்களின் போது கோயிலில் பக்தர்கள் வருகை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம்,குழந்தை பாக்கியம் கைகூடுகிறது என்று இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி,உத்தியோக உயர்வு,விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டிக்கொள்கின்றனர்.