2.9 மில்லயன் வியூஸ்களை தாண்டிய தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரெய்லர்

Must read

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’.

நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி திரைக்கு வருகிறது.

கர்ணன் திரைப்படத்துக்குப் பின் திரையரங்கில் வெளியாக இருக்கும் தனுஷ் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், 2015 ம் ஆண்டு வெளியான மாரி படத்திற்குப் பின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு மீண்டும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது, வெளியான சில மணி நேரங்களில் 2.9 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பழம் என்று அனைவராலும் அழைக்கப்படும் திருச்சிற்றம்பலம் எனும் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுவதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

2015-ல் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன்பின்னர் சில காரணங்களால் தனுஷும், அனிருத்தும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளனர். இதனை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்களுமே ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது.

More articles

Latest article