8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்நிலையில், யுகபாரதி எழுதிய ‘பொல்லாத பூமி’ பாடலை கென் மற்றும் டீ ஜே-வுடன் இணைந்து பாடியுள்ளார் தனுஷ்.