சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் வேலையில்லா பட்டதாரி-2

Must read

cwzjgn4w8aeqi7gதனுஷின் நடப்பில் மெகா ஹிட்டடித்த திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமே இன்றைய இளைஞர்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் எந்த அளவுக்கு கஷ்டப்படுகின்றனர், அப்படி வேலை கிடைத்தாலும் மேல்தட்டு மக்கள் அவர்களை எப்படி அடக்க நினைக்கிறார்கள் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என தனுஷ் கூறியிருந்தார் ஆனால் அது எப்போது யார் அந்த திரைப்படத்தின் இயக்குநர் என்றெல்லாம் கூறவில்லை ஆனால் தற்போது இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
அது என்ன அறிவிப்பு என்றால் இந்த திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளாராம், அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைக்கவுள்ளனர், கலைப்புலி எஸ் தானு மற்றும் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். இந்த திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று அவர் குறிப்பிடவில்லை.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் துவங்கவுள்ளதாம், தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரிக்கவுள்ளார்களாம்.
அதெல்லாம் சரி அப்ப “நிலவுக்கு என்மேல் என்ன கோபம்” திரைப்படத்தின் கதி..? அட பாஸ் இது தான் அது அந்த திரைப்படம் படத்தின் தலைப்பை மட்டும் மாத்திட்டாங்கன்னு கோலிவுட் கிசு கிசுக்குது…

More articles

Latest article