unnamed
திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள். இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள்.
இந்த கிரிக்கெட் போட்டியின் தமிழ்நாடு அணியின் அறிமுக விழா வருகிற நவம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த அறிமுக விழாவில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ‘சென்னை 28’ படத்தின் நடிகர்கள் கலந்துக் கொண்டு வீரர்களையும் அவர்களின் உடையை (ஜெர்ஸி) அறிமுக செய்ய இருக்கிறார்கள். மேலும் திரை நட்சத்திரங்களும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
unnamed-1
‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இதில் பங்கு பெறும் ஒவ்வொரு அணிகளுக்கான பெயர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’, தெலுங்கு அணிக்கு ‘தெலுங்கு தண்டர்ஸ்’,கன்னட அணிக்கு ‘கன்னடா கிங்ஸ்’, கேரளா அணிக்கு ‘மலையாளி ஹீரோஸ்’ என்று பெயர்கள் வைத்துள்ளனர்.
unnamed-2
இந்த போட்டியை FPL Media Market என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. இந்த வருடம் தென்னிந்தியாவில் உள்ள நான்கு அணிகளும், அடுத்த வருடம் வட இந்தியாவில் உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்களையும் இணைத்து போட்டிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் மேட்மிண்டன், கைப்பந்து, பெண்கள் சம்மந்தமான விளையாட்டுகளை தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
unnamed-3
சர்வதேச தரத்திற்கு இணையாக திறமையான பயிற்சியாளர்களை கொண்டு திரை நட்சத்திரங்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கிரிக்கெட் போட்டியில்,மீடியா பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ் அணியில், விவேக், சாக்‌ஷி சிவா, இசையமைப்பாளர் தமன், எஸ்.பி.பி.சரண், விஜய் ஆனந்த், தேவ் ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், விக்கி,சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பாலாஜி ஆகியோர் விளையாடுகிறார்கள். அணியின் மேனேஜர் பானுபிரகாஷ்.