‘ராயன்’ படத்திற்காக இணையும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி…!

Must read

செல்வராகவன் தனுஷுடன் இணைந்து படம் செய்வதாக தகவல் பரவிய நிலையில் அதனை உறுதி செய்தார் தனுஷ்.’ராயன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளார் .

இவ்வாண்டின் இறுதியில் செல்வராகவனுடனான இந்த படம் ஆரம்பிக்கும் நிலையில் இதில் செல்வராகவனின் ஃபேவரைட் கூட்டணியான யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற உள்ளனர். கலைப்புலி தாணு இப்படத்தினை தயாரிக்க உள்ளார்.

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ என அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.என்பது குறிப்பிடத்தக்கது .

More articles

Latest article