துரை

ன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பிரதமர் மோடி வர உள்ளதால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இன்று இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறுகிறது. அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குத் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இதையொட்டி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின் பிரதமர் மோடி மதுரை செல்கிறார் . பிரதமர் மோடி மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு நடைபெறும் சிறப்புப் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்.  பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.