திருத்தணி

வரும் 29 ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்குச் செல்ல மலைப்பாதை மற்றும் படிப்பாதை எனப்  பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் திருத்தணி கோவில் நிர்வாகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 

அதில்,

“திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடைவிதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படிவழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் லேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. 14.12.2023 முதல் 20.12.2023 வரை பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல படிவழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளத் திருக்கோவில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.