சென்னை

ன்று முதல் தமிழகத்தில் மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்க உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்து இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 17-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.