டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, 2024,  ஜனவரி 18  அன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்துடன், வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் என்பது நாடு முழுவதும் அரசுத் திட்டங்கள் 100% அளவிற்கு நிறைவேற்றப்படுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடியால் இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

 கடந்த ஆண்டு (2023)  நவம்பர் 15, அன்று பிரதமர் மோடியால் வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம்  தொடங்கி வைக்கப்பட்டது.  இத்திட்டம், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் தகவல், கல்வி, தொடர்பு (ஐஇசி) வாகனங்கள் மூலம் தகுதியான ஒவ்வொரு நபரையும் நலத்திட்டங்களுடன் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த வாகனங்கள் மூலம், அரசுத் திட்டங்கள், நீடித்த வேளாண்மை, நிலையான விவசாயம், குறைந்த கட்டண சிகிச்சை, சுகாதாரம், நிதி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் வாயிலாக , நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் தொடர்ந்து உரையாடி வருகிறார்.   இந்த திட்டத்தில்,  இரண்டே மாதங்களில் 15 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.  இந்த யாத்திரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாகும்.

இந்த கலந்துரையாடல் காணொலிக் காட்சி மூலம் ஐந்து முறை (நவம்பர் 30, 9 டிசம்பர் 16, டிசம்பர் 27 மற்றும் 2024 ஜனவரி 8) நடந்துள்ளது. மேலும், கடந்த மாதம் வாரணாசிக்கு சென்றபோது, தொடர்ந்து இரண்டு நாட்கள் (டிசம்பர் 17-18) வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணப் பயனாளிகளுடன் பிரதமர் நேரடியாக உரையாடினார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பயணம் தொடங்கப்பட்ட பின்னர் மக்களின் பங்கேற்பு எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது. 2023 டிசம்பர் 13, அன்று 4 வது வாரத்தின் முடிவில் இப்பயணம் 2.06 கோடி மக்களைச் சென்றடைந்த நிலையில், 2023, டிசம்பர் 22-க்குள் 5 வாரத்தில் இந்த எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்தது. அடுத்த நான்கு வாரங்களில், இப்பயணம் 10 கோடி பங்கேற்பாளர்களை ஈர்த்தது. பின்னர் இது 15 கோடி பங்கேற்பாளர்களைக் கடந்தது. ஜனவரி 17-ம் தேதி நிலவரப்படி, 2.21 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 9,541 நகர்ப்புறங்களை உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தில் 15.34 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த யாத்திரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாகும். மேலும்,  லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதார வசதியை ஏற்படுத்தித் தரவுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் அளவுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக 2 கோடிக்கும்அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

 ‘இல்லந்தோறும் குடிநீர்’ திட்டத்தின் மூலம் தூய்மையான நீர் இப்போது 79,000-க்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளை சென்றடைகிறது. அதே நேரத்தில் 1.38 லட்சத்துக்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளில் 100 சதவீத நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை எளிதாக்குகிறது.

மேலும், 17,000-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைந்துள்ளன. இது தூய்மையான வாழ்க்கைக்கு ஒரு சான்றாகும்.

நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அத்துடுன் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை  பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்று ( 2024,  ஜனவரி 18 ) பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். இதில், நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.