குதிரையின் முகத்துடன் கூடிய நந்தி அருள்பாலிக்கும் திருத்தலம் 

நெல்லை- தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலில் குதிரை முகத்துடன் நந்திதேவர் அருள்பாலிக்கிறார்.

சோழ மன்னன் ஒருவனுக்குக் குதிரை முகத்துடன் கூடிய பெண் குழந்தை பிறந்ததாம்.

மனம் வருந்திய மன்னன், தன் குழந்தைக்கு மனித முகம் வாய்க்க வேண்டி சிவபெருமானைத் தியானித்து தவம் இருந்தான்.

அவன் முன் தோன்றிய சிவனார், ”தாமிர பரணியின் மேற்குக் கரையில் உள்ள ஆலயத்துக்கு வந்து வழிபடு. நினைத்தது நடக்கும்’ என்று அருளி மறைந்தார்.

அதன்படி இங்கு வந்த சோழ மன்னன் தாமிரபரணியில் நீராடி, கயிலாசநாதரை வழிபட்டான்.

அப்போது குழந்தையின் குதிரை முகத்தை நீக்கி மனித முகம் தந்து அருளினார் ஈசன். 

அந்தப் பெண் குழந்தையின் பூர்வ ஜன்ம பாவம் நந்திதேவரைத் தாக்க… அவரின் திருமுகம் குதிரை முகமாக மாறிப் போனது என்கிறது தல புராணம்.