டில்லி

சென்ற வாரம் சிப்லா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வைராஜென் கொரோனா சோதனைக் கருவி குறித்த விவரங்கள் இதோ

இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.   எனவே கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.  எனவே பல புதிய கொரோனா சோதனைக் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான சிப்லா ஒரு கருவியைச் சென்ற வாரம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கருவிக்கு வைராஜென் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இது இந்த நிறுவனத்தின் மூன்றாம் கொரோனா சோதனை கருவியாகும்.   நேற்று முதல் தினம் அதாவது செவ்வாய்க் கிழமையில்  இருந்து இது விற்பனைக்கு வந்துள்ளது.   இந்த கருவி தற்போது வரிகளைச் சேர்க்காமல் ரூ7500 க்கு விற்கப்படுகிறது.   இதில் ஒரு 96 மாதிரிகள் பரிசோதிக்க முடியும்.

வைராஜென் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த கருவியில் மாதிரிகள் பிசிஆர் தொழில்நுட்பத்தின் கீழ் சோதனை செய்யப்படுகிறது.   இந்த கருவிகளை ஆய்வு செய்ததில் இவற்றில் வரும் முடிவுகள் துல்லியமாக உள்ளதாக கூறப்படுகிறது.   இந்த முடிவுகள் 98.6% இருந்து 98.4% வரை சரியாக இருந்துள்ளன.