டில்லி

த்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது

நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   தடுப்பூசிகள் தேவை அதிகரித்துள்ளதால் 18-44 வயதானோருக்கு தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகளுக்குப் பல மாநில அரசுகள் அழைப்பு விடுத்தன.  ஆனால் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைஸர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மத்திய அரசு மூலமாக மட்டுமே விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தன.   இதையொட்டி ஃபைஸர் நிறுவனம் தங்கள் தடுப்பூசிகள்:ஐ விற்பனை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து அந்நிறுவன செய்தி தொடர்பாளர், “எங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்பது குறித்து நாங்கள் மத்திய அரசுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.  தற்போது எங்கள் நிறுவன தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.  அனுமதி கிடைத்ததும் நாங்கள் தடுப்பூசியை விநியோகம் செய்ய உள்ளோம்.

மேலும் எங்கள் நிறுவன தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தத் தயாராக உள்ளது.  இந்தியாவில் உருவாகும் கொரோனா வைரசை எங்கள் தடுப்பூசி மிகவும் திறனுடன் தடுக்க வலதாகும்.   இதற்கான துரித அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்கிறோம்.  அநேகமாக ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதத்துக்குள் நாங்கள் 5 கோடி தடுப்பூசிகள் அளிக்கத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.