டெல்லி: பஞ்சாப் வங்கி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி வெளிநாடுகளில் தலைமறைக இருந்து வந்த நிலையில், தற்போது  டொமினிக்கன் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி.  அவரைத்தொடர்ந்து அவரது உறவினர் மெகுல் சோக்சியும் தலைமறைவானார். இவர் ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் அங்கு குடியுரிமை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.,

அதன் காரணமாக, இவரை  இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பான அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் மெகுல் சோக்சி  ஆண்டிகுவாவில் இருந்து தப்பித்து டொமினிகா என்ற சிறு தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். மெகுல் சோக்சியை கைது செய்ய இந்தியா இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியது.

இதையடுத்து மெகுல்சோக்சி இண்டர்போல் உதவியுடன் டொமினிகா தீவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் 48 மணிநேரத்தில்ஆன்டிகுவா அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகிறது.

டொமினிகா ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு அருகில் உள்ளது. அவர் விரைவில் ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூறிய ஆன்டிகுவா மற்றும் பார்புடா காஸ்டன் பிரவுன் பிரதமர், ‘நான் இதை இந்திய மக்களுக்கும், உலகுக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருப்பதை வரவேற்கவில்லை. அவர் இங்கிருந்து விரைவில் எங்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்றே நாங்கள் விருப்புகின்றோம் ” என்றார்.

ஏற்கனவே நிரவ்மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது மெகுல் சோக்சியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.