RSS WOMEN MEMBERS
4000 உறுப்பினர்களைக் கொண்ட பூமாதா பாசறை நடத்தி வருபவர் தி
ருப்தி தேசாய். இவர் பெண்கள் கோவில் நுழைவுப் போராட்டம் மூலம் நன்கறியப் பட்டவர்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது பெண்களின் வாக்குகளால் தான். எனவே பா.ஜ.க.வின் தத்துவ ஆசானான ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களை உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்முடைய ” பாலின சமத்துவப்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விரைவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்-க்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறியுள்ளார்.
mohan-bhagwat_759
 
தேசாய்யின் கோரிக்கையை ஏற்க முடியாது என மகாராஸ்திர பா.ஜ.க. துணைத் தலைவர் கன்ட நலவாடே  எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தேசாய் இது போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை விடுத்து, பெண்கள் சந்தித்து வரும் மற்றப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவேண்டுமென அவர் தெரிவித்தார்.
mohanbhagawath
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் பெண்களை அனுமதிக்கக் கோரி ஏப்ரல் 28ம் தேதி பிரச்சாரம் துவக்கவுள்ளதாகத் தெரிவித்தார்