ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்றும் ஆஜராகாமல் ஓபிஎஸ் மீண்டும் எஸ்கேப்…..

Must read

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத் தில், பல முறை சம்மன் அனுப்பியும், ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு காரணங்களை கூறி, ஆஜராவதை தவிர்த்து வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்றும், விசாரணைக்கு ஆஜராகாமல், டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் இன்று பிற்பகல் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் டில்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுகவினர் கூறியதை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாது காவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்ககள், ஜெ., சசி உறவினர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள், அமைச்சர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடிந்து விட்ட நிலையில், இறுதியாக துணைமுதல்வர் ஓபிஎஸ் இடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது.

கடந்த ஆண்டு முதல் இதுவரை 5 முறைக்கு மேல் சம்மன் அனுப்பப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி துணைமுதல்வர் ஓபிஎஸ், ஆணையத்தில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 28ந்தேதி ஆஜராக ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் காரணமாக, இன்றைய விசாரணைக்கு ஒபிஎஸ் ஆஜராவார் என பெரும் எதிர்ப்பு நிலவியது. ஆனால், டில்லி உயர்நீதி மன்றம் இன்று   இரட்டை இலை சின்னம்தொடர்பான வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், ஓபிஎஸ் டில்லி செல்ல இருப்பதாக வும், அதன் காரணமாக இன்றைய விசாரணைக்கும் ஆஜராகமாட்டார் என்று கூறப்படுகிறது.

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியவர்களே முதன்மையானவரே  ஓபிஎஸ்தான். ஆனால், தற்போது ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவர் ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களை கூறி தப்பித்து வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

More articles

Latest article