சென்னை: பள்ளிகள் திறக்காததால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுடள்ளதாக,  ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  அன்பில் மகேஷ் கூறினர்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன. சென்னை  சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த முகாமை, தமிழ்நாடு  மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைசச்ர் அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்கiள சந்தித்த அமைச்சர், சுப்பிரமணியன், பள்ளியில் பனி செய்யும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை ந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,  கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோன பரவல் குறைந்து வருவதால், முதல்கட்டமாக செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி 9 மற்றும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

80 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், மாணவர்கள் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வெகு நாட்களாக  பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். அதிமுக அரசு சமச்சீர் பாட திட்டத்தை மாற்றியதால் அரசுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நந்தனம் கலை கல்லூரியில் நாளை துவக்கி வைக்க உள்ளதாகவும்,  குழந்தைகளுக்கான கல்வி கேள்விக்குறியாகி விடும் என்பதாலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாகவும்  விளக்கம் அளித்தார்