சென்னை: 
12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும்,  நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிகக் கனமழை தொடரும் என்றும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.