டில்லி:

 ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  சோனியாவின் மகள், பிரியங்கா விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சிகிச்சையில் இருக்கும் அவரின்  உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

காங்., தலைவர் சோனியாவின் மகள், பிரியங்கா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 23ல், டில்லி, கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 6 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பிரியங்காவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறைந்து உள்ளதாகவும், அவரது உடல் நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும்டா க்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, பிரியங்காவின் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், சற்று சோர்வுடன் காணப்படுகிறார்.  இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி, பூரண நலன் அடைந்த பின், அவர் வீடு திரும்புவார்.

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.