டில்லி,

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பதவி வருகிறது. டெங்கு கொசுவை ஒழிக்க அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை எடுக்கப்படு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

தென் மாநிலங்களே டெங்கு பாதிப்புக்கு அதிக அளவில் ஆளாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 கேரளாவில்  பாதிப்பு – 12,906;  இறப்பு – 22

தமிழகம் பாதிப்பு – 5,013; இறப்பு – 1

கர்நாடகா பாதிப்பு – 3682; இறப்பு – 5

ஆந்திரப் பிரதேசம் பாதிப்பு – 711 இறப்பு- விவரம் இல்லை

 புதுச்சேரி பாதிப்பு – 373 இறப்பு- விவரம் இல்லை

நாடு முழுவதுமான பாதிப்பு – 26,064; இறப்பு – 36