மதுரை,

மிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்றைய விசாரணயின்போது அரசு விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு, வழக்கை 22தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக மலர் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக மக்களிடையே பீதி நிலவுகிறது.

இந்நிலையில்,கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளதாகவும் கொசுக்களை ஒழிக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, டெங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், டெங்கு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அபபோது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,  தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் டெங்குவால் 46பேர் உயிரிழந்துள்ளனர் என  கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, வழக்கை ஜன.22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.