மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல மடங்கு அதிகம் ஆகும். இது தொடர்பான பரபரப்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று எகனாமிக் டைம்ஸ் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

notes9

அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ரிசர்வ் வங்கி மூலமோ, அல்லது ரிசர்வ் வங்கியின் அச்சகங்களில் பணிபுரிவோர் மூலமோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ இந்த இரகசியம் முன்பே கசிந்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்த ஒரு மாதத்தில் மட்டும் டெப்பாசிட் தொகை இராட்சத வளர்சி அடையக்கூடிய சாத்தியமே இல்லை.
அந்த மாதத்தில் சம்பள கமிஷன் அரியர் பணம் 34 ஆயிரம் கோடி ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஸ்பெக்ரம் ஏலத்தொகை 32 ஆயிரம் கோடி ரூபாயும் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது போக மிச்சம் 3 லட்சம் கோடிக்கும் மேலான பணம் எங்கிருந்து வந்தது? இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் வங்கி அதிகாரி டி.ஆர்.ராமசுவாமி இது குறித்து கூறுகையில் 500, 1000 நோட்டுக்களை செல்லத்தக்க சிறிய நோட்டுக்களாக மாற்றும் முயற்சியாக இது இருக்கலாம். அந்த குறிப்பிட்ட மாதங்களில் வங்கியின் உள்ளே வந்த 500, 1000 நோட்டுக்களின் அளவையும், வெளியே போன 100, 50 ரூபாய் நோட்டுக்களின் அளவையும் கணக்கிட்டால் குற்றம் நடந்தது எங்கே என்று தெளிவாக கண்டுபிடிக்கலாம். இது தொடர்பான புள்ளிவிபரங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும். என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பும் முன்பாகவோ. அல்லது பொதுநல வழக்குகளின் எதிரொலியாக நீதிமன்றமே இதை விசாரிக்க சொல்லி உத்தரவிடும் முன்பாகவோ மத்திய அரசே இது பற்றிய விசாரணையை துவங்க வேண்டும்.
Thanks to: http://blogs.economictimes.indiatimes.com