டெல்லி: ‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு சீனாவின் வுகானில்   தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், தொடர்ந்து உருமாறிய நிலையில் பரவி வருகிறது. உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் பிறழ்வுகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டன.  இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட  ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்று பெயரிட்ட உலக சுகாதார நிறுவனம், பின்னர் அறியப்பட்ட, ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டியது. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரசுக்கு டெல்டா பிளஸ் ((பி .1.617.2) AY.1 என பெரிடப்பட்டு உள்ளது.

‘இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்,  டெல்டா வைரஸ் உருமாறிய நிலையில், , ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.  இந்த வைரஸ் இந்த வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இது கவலைத்தரக்கூடியது அல்ல என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் டெல்டா பிளஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று கூறிய வி.கே.பால், இந்த மாறுபாட்டின் கூடுதல் பிறழ்வு கண்டறியப்பட்டு உலகளாவிய தரவு அமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது கவலைத்தரக்கூடியது அல்ல என்றாலும்,  பொது களத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, இந்த மாறுபாடு மோனோக்ளோனல் ஆன்டிபாடியின் பயன்பாட்டை ரத்து செய்கிறது இந்த மாறுபாட்டைப் பற்றி நாங்கள் இன்னும் படிக்க வேண்டியது உள்ளது.

இந்த புதிய வகை வைரசின் விளைவுகளை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. வரும் வாரங்களில் தடுப்பூசி போடும் பணிகள் புது வேகத்துடன் விரைவுபடுத்தப்பட உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.